Sri Saravana Bhavan Saravana Bakeries Shri Saravana Bhavan Classic Sri Saravana Juices

About Saravana Bhavan

Hotel Sri Saravana Bhavan is an out come of Hardwork by Mr. V.C.S.SHIVARAMAN, who is the Chairman and Managing Director of SRI SARAVANA BHAVAN GROUPS, SALEM . With Attitude towards Growth , Strong Work and Belief in him, Sri Saravana Bhavan was Started on 3rd of Feb, 1993 at Salem. Tasty food and Quality towards it lead the path to Success of Sri Saravana Bhavan.

Below is the Details of the Service that we are into:


1996 Sri Saravana Bhavan Classic
1998 Saravana Bakeries & Ice Creams
2004 Saravanaa's Juices
2005 Sri Saravana Bhavan ( Ther Vedi)
2006 Sri Saravana Bhavan China China Aasai

MD Speaks

 

முதல் வணக்கம்,


இந்த இணையதளத்தின் மூலம் உங்களை சந்திப்பதிப்பதற்கு காரணமான என் தாய் ,தந்தையரை வணங்கி மனிதநேயத்தோடு மனம் மலர்ந்து உங்களோடு இணையத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .


உலகமெல்லாம் அமைதி நிலவ வேண்டும்
உள்ளமெல்லாம் தூய்மை உலவ வேண்டும்
இதயமெல்லாம் அன்பிலே பூத்து குலுங்க வேண்டும்
அதில் பாசமும், பண்பும் கனிகளாக சுவை தர வேண்டும்;

உலகில் உண்டு ஒரே இனம்,
அது மனித இனம் மட்டுமே என்ற உணர்வு  வேண்டும்.

பகல் இரவு பாராமல்
வலி எல்லாம் தாளாமல்
ஈரைந்து மாதம் சுமந்து
நல்மழலை தருகின்ற
அன்னை போல - அன்னையின் பாசத்தை  போல்
இவ்வுலகம் அன்பால் ஒன்றினைய வேண்டும்
ஆம்!  மாசில்லாத மனித நேயம் மலர வேண்டும் !

இதுவே எங்களின் ஆசை
இதுவே எங்கள் குரலின் ஓசை .

இந்த இணையதளத்தின் மூலம் லட்சோப லட்ச மக்களை சந்திக்கின்ற இந்த இனிய நேரத்தில்

 
தங்கம் போல் தரம் கொடுத்து
தரணியிலே தங்க இடம் கொடுத்து
எண்ணம் போல் வளர்ச்சி கொடுத்து
ஏற்றம் போல் வாழ்வு கொடுத்து
 ஈடில்லா புகழை கொடுத்து
எல்லாவற்றிக்கும் மேலாக முகவரி இல்லாத எங்களுக்கு முகவரி கொடுத்து
எங்களை வழிநடத்தி செல்லும் தெய்வங்களான
வாடிக்கையாளர்கள் உங்களுக்கே எங்களது
முதல் வணக்கத்தை சமர்ப்பிக்கிறோம்


அதே நேரத்தில்,
எங்கள் கண்கள் அயராது
தோள்கள் ஓயாது
சேவைகளை கரத்திலே கொணர்ந்து
தேவைகளை மனதிலே உணர்ந்து
சுவைகளை தரத்திலே கலந்து
வாடிக்கையாளர்களை நெஞ்சிலே சுமந்து
என்றென்றும் சுகமான சுமைகளாக
இவ்வுலகில் வலம் வருவோம் என்பதே
எங்கள் முதல் உறுதிமொழியாகும்....

MD Speaks

Mr. V.C.S.SHIVARAMAN,

Chairman & Managing Director

SRI SARAVANA BHAVAN GROUPS, SALEM